வியர்குருவால் கஷ்டப்படுறீங்களா? இதோ அதைப் போக்க சில வழிகள்!
கோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடிய ஓர் பிரச்சனை தான் வியர்குரு. அதிகப்படியான வெயிலால் போதிய காற்றோட்டம் கிடைக்காமல், வியர்வை அதிகம் வெளியேறுவதால் வியர்க்குரு வரும். இதனைத் தவிர்ப்பதற்காக பலரும் காட்டன் உடைகளை உடுத்துவார்கள் மற்றும் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுப்பார்கள். இருப்பினும் வியர்குரு வந்துவிடும். ஆனால் ஒருசில இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் கோடையில் வரும் வியர்குருவைத் தடுக்கலாம். இங்கு அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி பயன் பெறுங்கள்.
பை-கார்போனேட் பவுடர்
1 டேபிள் ஸ்பூன் பை-கார்போனேட் சோடாவை 1/2 கப் நீரில் கலந்து, அத்துடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, பஞ்சு பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வர, குத்தும், எரியும் வியர்குருவைப் போக்கலாம்.
சந்தனம்
கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும் வியர்குருவை சந்தனம் கொண்டும் போக்கலாம். இதற்கு சந்தனத்தில் உள்ள குளிர்ச்சித்தன்மை தான் காரணம். அதற்கு சந்தனப்பொடியை ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள்.
வேப்பிலை
வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, வியர்குருவால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தடுக்கும். எனவே வியர்குரு அதிகம் இருந்தால், வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவுங்கள்
No comments:
Post a Comment