கருப்பா இருக்கும் கழுத்தை வெள்ளையாக்குவது எப்படி?
வெயில் காலத்தில் பெண்கள் பலரும் தங்களது முடிகளை தூக்கி கொண்டைப் போட்டுக் கொள்வார்கள். ஆண்களோ அதிகம் வியர்க்கும் என்பதால் மிலிட்டரி கட் செய்து கொள்வார்கள். இப்படி இருக்கும் போது கழுத்துப் பகுதி கருமையாக இருந்தால் எப்படி இருக்கும். இப்படி கருமையாக உள்ள கழுத்தை போதிய பராமரிப்புக்களின் மூலம் வெள்ளையாக்கலாம். குறிப்பாக ப்ளீச்சிங் தன்மை கொண்ட எலுமிச்சையைக் கொண்டு கழுத்தைப் பராமரித்து வந்தால், மிகவும் வேகமாக கருமை அகலும்.
எலுமிச்சை மற்றும் தேன்

இந்த முறை கழுத்து கருமையை மட்டுமின்றி, பல்வேறு சரும பிரச்சனைகளையும் தடுக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
எலுமிச்சை மற்றும் மஞ்சள் தூள்

எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இந்த முறையை மேற்கொண்டு வந்தால், கழுத்தில் உள்ள கருமை வேகமாக நீங்கும்.
எலுமிச்சை மற்றும் தக்காளி

தக்காளி சாற்றில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கருமையான இடத்தில் தடவி 30-35 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கழுத்தில் இருக்கும் கருப்பு படலம் விரைவில் மறையும்.
நன்றி .

No comments:
Post a Comment